ரஷ்யாவுக்கு உள்ளே, கேஷ் என்னும் பெரும் நிலப்பரப்பை உக்ரைன் படைகள் கைப்பற்றி வைத்துக் கொண்டு, ரஷ்யாவின் கண்ணுக்கு உள்ளே விரலை விட்டு ஆட்டி வருகிறார்கள்.
இன் நிலையில் கேஷ் நகரை மீட்க்க, ரஷ்ய ராணுவம் பல தடவை முனைந்தும், பின்னடைவைச் சந்தித்ததோடு ,பல படை வீரர்களை இழந்தது. இதனால் ரஷ்யா தற்போது , தனது ராணுவத்தை அங்கே அனுப்பாமல், வட கொரிய ராணுவ வீரர்களை களத்திற்கு அனுப்பியுள்ளது.
அதாவது வட கொரிய ராணுவம், இனி உக்ரைன் வீரர்களின் பலமான தாக்குதலுக்கு ஆளாகப் போகிறார்கள். அதன் பின்னர் உக்ரைன் படைகள் சற்று தளர்ந்தால் தனது படையை அனுப்பலாம் என்று ரஷ்யா எண்ணுகிறது. ரஷ்ய உக்ரைன் மீது போரை ஆரம்பித்து, அகலக் கால் வைத்து சிக்கிக்கொண்டுள்ளது. பிடித்த பகுதியை தக்க வைக்கவும் வேண்டும். புதிய தாக்குதல் ஒன்றை நடத்தவும் வேண்டும் என்று நினைக்கிறது.
ஆனால் அது சாத்தியமே இல்லை. மேலும் ரஷ்ய ராணுவத்தில் இணைய ரஷ்ய இளைஞர்கள் தயாராக இல்லை. இந்தப் போர் ஒரு தேவையில்லாத விடையம் என்று ரஷ்ய மக்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் இதனை ஆதரிக்கவும் இல்லை. இன் நிலையில் ரஷ்யாவில் புட்டின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளது. இந்தப் போர் ரஷ்யாவை, 10 வருடங்கள் பின் தள்ளியுள்ளது என்பதே உண்மை நிலை ஆகும்.