உலகில் முதன் முறையாக சீனா தயாரித்துள்ள நீர்மூழ்கிக் கப்பலில், ஆளில்லா விமானம் உள்ளது. இது உலகையே அதிரவைத்துள்ளது. காரணம் வழமையாக நீர்மூழ்கிக் கப்பல்களில் ட்ரோப்பி-டோ என்ற ஏவுகணைகளை பயன்படுத்துவார்கள்.
அது போக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகளையும் ஏவ முடியும். இது என்னடா புதிசா இருக்கே என்று பல நாடுகள் மூக்கில் விரலை வகைக்கிறது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ட்ரோன்(ஆளில்லா விமானம்) கடலுக்கு அடியில் படுவேகமாக நீந்திச் சென்று எதிர் கப்பல்களை தாக்கி அழிக்கும், இதேவேளை நீந்திக் கொண்டு வந்து கடல் மேல் மட்டத்தை அடைந்து பின்னர் பறக்க ஆரம்பித்து, வேவு பார்க்கும். தகவல்களை நீர்மூழ்கிக் கப்பலுக்கு கொடுக்கும். அதே சமயம் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள போர் கப்பலையும் இது தாக்க வல்லது.
இதனால் அமெரிக்காவின் கப்பல் படைக்கு பெரும் ஆபத்து இருப்பதாக, ராணுவச் செய்திகளை வெளியிட்டும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளது.