Elon Musk s TIME Magazine cover: அமெரிக்க அதிபர் எலான் மஸ்க்: டைம் சஞ்சிகை படத்தால் பெரும் சர்சை

டைம் இதழின் சமீபத்திய பதிப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருக்க வேண்டிய ஓவல் அலுவலகத்தில் உள்ள ரெசொலூட் மேசைக்குப் பின்னால் மஸ்க் அமர்ந்திருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் ஜப்பானிய பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் இருந்த ட்ரம்ப்பிடம், மஸ்கின் அட்டைப்படம் குறித்து கருத்து கேட்டபோது, “இல்லை” என்று முதலில் பதிலளித்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிண்டலாக, “டைம் இதழ் இன்னும் செயல்படுகிறதா? அது கூட எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். தொடர்ந்து, “எலோன் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மிகப்பெரிய மோசடி, ஊழல் மற்றும் வீணடிப்புகளைக் கண்டுபிடித்து வருகிறார்,” என்று கூறிய அதிபர், பில்லியனர் மஸ்க் USAID ஐ மூடுவதற்காக செய்த பணிகளைக் குறிப்பிட்டார். “அவருக்கு அற்புதமான ஊழியர்கள் உள்ளனர். அவர் நீண்ட காலமாக இதைச் செய்ய விரும்பினார்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபர் விருதைப் பெற்றதை ட்ரம்ப் பெருமையாகக் குறிப்பிட்டார். பிப்ரவரி 2017 இல், டைம் இதழ் வெள்ளை மாளிகை தலைமை மூலோபாயவாதி ஸ்டீவ் பன்னோனை அட்டைப்படத்தில் போட்டு, “ஸ்டீவ் பன்னோன் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதரா?” என்ற கேள்வியை எழுப்பியது.

அப்போது, பன்னோன் ‘பெரிய சூழ்ச்சிக்காரர்’ என்று குறிப்பிடப்பட்டார். ஏப்ரல் 2017 இல், ட்ரம்ப் அந்த அட்டைப்படத்தால் எரிச்சலடைந்ததாகவும், “அது சும்மா நடக்காது” என்று மக்களிடம் கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. தனது கீழ் இருப்பவர்கள் தன்னை விட அதிகமாக கவனிக்கப்படுவதைப் பற்றி பேசும்போது அதிபர் இந்த சொல்லைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.