மூக்கை உடைத்துக் கொண்ட ரம்- மற்றும் கூட்டாளி எலான் மஸ்க்- நீதிபதிகள் பதிலடி !

அமெரிக்க அதிபர் டொனால் ரம், தனது விசேட அதிகாரங்களை பாவித்து, US-AID என்ற மாபெரும் தொண்டு நிறுவனத்தை முடக்கியுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினிச் சாவை சந்திக்க நேரிடும் என்று, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. US-AID நிறுவனத்தில் வேலை பார்த்த, சிலர் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக கூறியே, ரம் இதனை தடைசெய்தார்.

இதற்கு முக்கிய காரணம் அவரது கூட்டாளி எலான் மஸ்க். டெஸ்லா அதிபர் கொடுத்த சிபார்சின் பேரில் தான் ரம் இந்த நிறுவனத்தை இழுத்து மூடினார். ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்ள மிக முக்கியமான (Federal Judge)உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இணைந்து, ரம்பின் முடிவை தடைசெவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் அமெரிக்காவில் ஜனாதிபதி செயலகத்திற்கும் , நீதித் துறைக்கும் இடையே பெரும் போர் வெடித்துள்ளது.

இதில் ஜனாதிபதி செயலகம், யார் பெரியவர் என்று பார்ப்போம் என்று, கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் நீதித் துறைக்கு இருக்கும் அதிகாரங்கள், ஜனாதிபதியையே கைது செய்யும் அளவுக்கு உள்ளது என்பது அவர்களுக்கு புரிந்து இருக்கவேண்டும்.

இன் நிலையில் எப்படி இந்த தடை உத்தரவை மீண்டும் அமுலுக்கு கொண்டு வருவது என்று ஜனாதிபதி செயலகம், சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து வருகிறது. அதிபர் ரம்புக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.