பிரித்தானிய அரசின் கட்டளையை அடுத்து, மேலும் சில இடங்களில் இமிகிரேஷன் அதிகாரிகள் கடைகள் மற்றும் உணவங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் லூட்டனில் பெரும் சோதனை இடம்பெற்றுள்ள நிலையில்.
பேர்மிங்ஹாம் நகரில் தற்போது பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சீக்கியர்களின் கடை தொடக்கம் குஜராத்திகள் மற்றும் பாக்கிஸ்தானியர்கள் கடைகளில் இமிகிரேஷன் அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.
எனவே அனைவரும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருப்பது நல்லது. சவுத்போட்டில் இடம்பெற்ற கத்திக் குத்து, மற்றும் குரைடனில் நடந்த சம்பவங்கள் என்று பல இடங்களில் அகதியாக வந்து விசா இல்லாமல் மறைந்து வாழும் நபர்கள் செய்யும் குற்றங்களால். தற்போது சம்பந்தமே இல்லாத பலர் பாதிப்படைகிறார்கள் என்பதே உண்மை.