சிறையில் இருந்து தப்பி பொலிஸ் மோட்டார் சைக்கிளை எடுத்து மது போதையில் ஓட்டி மாட்டிய கைதி !

சிறையில் இருந்து, நூதனமாக தப்பிச் சென்ற கைதி, பின்னர் மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவேளை கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் ஒரு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அனுராதபுரம்-பாதெனிய பிரதான வீதியில் உள்ள கோன்வெவ பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக சந்தேக நபர், மோட்டார் சைக்கிளுடன், தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த வேளை இவர் சிறையில் இருந்து தப்பிய கைதி என்பது பொலிசாருக்கே தெரியாதாம்,

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று முன் தினம்(24) அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. விளக்க மறியலில் இருந்த இந்த கைதி, நூதனமான முறையில் வெளியே வந்து, பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிளையே திருடி அங்கிருந்து தப்பிச் சென்றது மட்டும் அல்லாது. 

அதன் பின்னர் நன்றாக தண்ணி அடித்து விட்டு மது போதையில் படு ஜாலியாக அந்த மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எந்த அளவு தில் இருக்கிறது என்று பாருங்கள் ?