Trump explodes at Denmark PM: டென்மார்க் பிரதமரோடு டெலிபோனில் வெடித்து சிதறிய ரம்: கிரீன் லாந்து வேண்டும் ராணுவத்தை அனுப்புவேன்

நேற்றைய தினம்(25) டென்மார்க் பிரதமரோடு அமெரிக்க அதிபர் டொனால் ரம் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார். இதன் போது கிரீன் லாந்தை அமெரிக்காவுக்கு தருமாறு அவர் கோரிக்கை விடுக்கவே. 800 வருடங்களாக கிரீன் லாந்து தேசம் டென்மார்கோடு தான் இருக்கிறது. அது விற்பனைக்கு இல்லை என்று பிரதமர் கூற. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. 

இதனை அடுத்து மிகவும் காரசாரமான வார்த்தைகள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், டென்மார் பிரதிநிதி EU ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால் ரம் தனது ராணுவத்தை கொண்டு டென்மார்கை கைப்பற்றும் என்று அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ள விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை அடுத்து இந்தப் பிரச்சனையை தற்போது ஐரோப்பிய ஒன்றிய கையாள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நேட்டோ நாடுகளுக்கு இடையே பெரும் பிழவு ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஜேர்மனி டொனால் ரம் மீது கடும் அதிருப்த்தியில் உள்ளது. அதே போல பிரிட்டனும் கடுப்பில் உள்ளது. இதற்கு காரணம் எலான் மஸ், மற்றும் அதிபர் எலான் மஸ்கிற்கு கொடுத்துள்ள அதிகாரங்கள் தான்.