ஜேசு நாதர் தண்ணீரின் மேல் நடந்ததாக சொல்லப் இடத்தில், பழமையான மொழி ஒன்றில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இந்த மொழி பற்றி எவருக்கும் தெரியவில்லை. இது என்ன மொழி என்பதும் புரியவில்லை. இதனால் இதனை Decode செய்து வாசிக்க, நவீன தொழில் நுப்பத்தை பாவிக்கிறார்கள், அறிஞர்கள். இந்தக் கல்வெட்டு சரியாக 1,700 வருடங்கள் பழமையானது என்று கார்பன் டேட்டிங் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.
இஸ்ரேல் மற்றும் சிரியா எல்லையில் உள்ள நகர் ஒன்றில் இந்த கல்வெட்டை கண்டு பிடித்துள்ளார்கள். இது மிகப் பழமையான கிரேக்க மொழியாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஜேசு நாதர் Sea of Galilee in Israel என்னும் இடத்தில் உள்ள தடாகம் ஒன்றில் தான் நீருக்கு மேல் நடந்து அதியத்தை நிகழ்த்தி இருந்தார்.
இதற்கு அருகாமையில் தான் இந்த கல் வெட்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக புதைந்து இருந்துள்ள நிலையில். சமீபத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக வெளியே தோன்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.