உலகில் அதிக அளவு தங்கத்தை உற்பத்திசெய்யும் 7 நாடுகளை இங்கே தருகிறோம். ஆனால் அதில் சில நாடுகளில் தங்கத்தை நீங்களும் எடுக்கலாம். அப்படியான நாடுகள் எவை என்று பார்கலாம்.
1.முதல் நாடாக அவுஸ்திரேலியா உள்ளது, இவர்கள் 12,000 டன் எடை கொண்ட தங்கத்தை கடந்த வருடம் ஏற்றுமதி செய்துள்ளார்கள். பொதுவாக அவுஸ்திரேலியாவின் பேத் நகரம், மற்றும் பல மாநிலங்களில் உள்ள ஆற்றம் கரை ஓரங்களில் உள்ள மண்ணில் கூட சிறிய அளவில் தங்கம் உள்ளது. அங்கே உள்ள மண்ணை அரித்தால் அதனைக் காணலாம். நாள் முழுவதும் நேரம் செலவு செய்தால் குறைந்த பட்சம் 3 அல்லது 5 கிராம் தங்கத்தை உங்களால் எடுக்க முடியும்.
2.அடுத்து தென் ஆபிரிக்கா. இங்கே உள்ள மலைகளிலும் சுரங்கத்திலும் தங்கம் உள்ளது. அதிலும் குறிப்பாக Carletonville in Gauteng, என்ற இடத்தில் உள்ள பெரும் மலைத் தொடர்களிலும். அதே இடத்தில் உள்ள குகைகளிலும் தங்கம் கற்களில் படிந்துள்ளது.
3. அமெரிக்காவில் நெவேடா மற்றும் கொலராடோ ஆகிய மாநிலங்களில் தங்கம் உள்ளது. இங்கேயும் ஆற்றுக் கரை ஓரமாக உள்ள குறு மணலில் தங்கம் உள்ளது. சில இடங்களில் நீங்கள் கட்டணத்தை செலுத்தி விட்டுச் சென்று, தங்கத்தை தேடலாம். கிடைக்கும் தங்கம் உங்களுக்கு தான் சொந்தம்.
4.அடுத்த நாடு சீனா, இந்த நாடு வேலைக்கு ஆகாது. தங்கம் தேடச் சென்றால் , உங்களை தாடி உங்கள் உறவினர்கள் வரவேண்டி இருக்கும். வெள்ளை வேனில் உங்களை சீன ராணுவமே கடத்திச் சென்றுவிடும். வாய்ப்பில்லை ராஜா !
5. இந்தோ நேனியா, இந்த நாட்டிலும் தங்கம் உள்ளது. குறிப்பாக Grasberg—in Papua என்னும் இடத்தில் பெரும் தங்க சுரங்கம் உள்ளது. ஆனால் பொது மக்கள் சென்று எடுக்க முடியாது.
6.பிரேசில் நாட்டில் தங்கம் உள்ளது. குறிப்பாக அமேசன் காடுகளில் உள்ள மலைகளில் மற்றும் இந்தப் பகுதியில்(regions like Amazon and Pará states) தங்கம் உள்ளது. உள்ளூர் மக்களை வைத்து தனி நபராக தங்கத்தை எடுக்க முடியும். ஆனால் அந்த இடத்தில் இருந்து தப்பி வெளியே வருவது என்பது மிகவும் சவாலான விடையம்.
7. ரஷ்யாவிலும் தங்கம் அதிக அளவி எடுக்கப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் தெரியும், அந்த இடத்திற்கு கூட எம்மால் செல்ல முடியாது. வாய்ப்பில்லை ராஜா