தாய்வானை கைப்பற்ற சீனா முடிவு ஆனால் 30,000 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தை இறக்கிய Pentagon

தாய்வான் நாடு சீன நாட்டின் ஒரு பகுதி என்று, சீனா கூறிவருகிறது. இதே போலத் தான் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தையும் சீனா தனது வரை படத்தில் இணைத்து வைத்துள்ளது. தற்போது தைவான் நாட்டை கைப்பற்றி, அதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சீனா முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கு சீன அரசில் உள்ள முக்கிய தலைவர்களும் பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில்…

திடீரென தனது படைகளை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது அமெரிக்கா. அதாவது ,மேலும் 15,000 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா தாய்வானுக்கு அனுப்பியுள்ளது. இதனால் மொத்தமாக சுமார் 30,000 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் தாய்வானில் நிலை கொண்டுள்ளது. இந்த முடிவை அமெரிக்க பாதுகாப்பு பிரிவான பெண்டகன் எட்டியுள்ளது.

என்ன தான் அமெரிக்க அதிபர் என்று டொனால் ரம் இருந்தாலும், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது அமெரிக்காவில் எவரும் தலைபோட முடியாது. அதனை தேசிய பாதுகாப்பு நிலையமான பெண்டகனே முடிவு செய்கிறது. இதில் ராணுவத் தளபதிகளே உள்ளார்கள்.