சிங்கள ராணுவம் ஒட்டுக் குழுவை வைத்தே மன்னாரில் சுட்டுள்ளது: வழக்கு தமக்கு எதிராக திரும்பக் கூடாது !

கடந்த 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து, 4 பேரை சிலர் சுட்டு விட்டு தப்பிச் சென்றார்கள். இதில் 2 பேர் உயிரிழந்தார்கள். மேலும் இருவர் வைத்தியசாலையில் உள்ளார்கள். இதனை மட்டுமே மீடியாக்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. ஆனால் இதன் பின்னால் ஒரு பெரும் மர்மம் உள்ளது. இந்த 4 பேரும் சாட்சி சொல்லவே 16ம் திகதி நீதிமன்றம் நோக்கி வந்ததாகவும்.

இவர்களை நீதிமன்றம் செல்ல விடாமல், துப்பாக்கியால் சுட்டுள்ளது, ராணுவத்துடன் இணைந்து வேலை செய்யும் ஒரு குழு. இந்தக் குழுவில் உள்ள 5 பேரை பொலிசார் கைதுசெய்துள்ள நிலையில். மேலும் ஒருவரை நேற்று(24) கைதுசெய்துள்ளார்கள். இவர் கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே சிங்கள ராணுவத்தின் சதி வேலை தான். தாங்கள் சம்பந்தப்படாமல் ஆதரவாக இருக்கும் இந்த ஒட்டுக்குழுவை வைத்து ராணுவம் காரியத்தை முடித்துள்ளது. இந்த 4 பேரும் எந்த வழக்கை சந்திக்க வந்தார்கள் என்பதனை பொலிசார் மர்மாகவே வைத்திருக்கிறார்கள். இன்று வரை எவரும் இந்த வழக்கு தொடர்பாக வாயே திறக்கவில்லை.