அனுராவின் அடுத்த அதிரடி: சுவிஸ் வங்கியில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் காசை கைப்பற்ற பேச்சு ..

ஆஹா… மாட்டப் போகும் பல பிரபலங்கள். சுவிஸ் வங்கியில் உள்ள இலங்கை அரசியல்வாதிகளின் பணத்தை கைப்பற்ற இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் உதவுவோம் என்று சுவிஸ் நாட்டு தூதுவர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt) தெரிவித்தார்.

இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனுராவின் அரசு தடாலடியாக எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால், பல அரசியல் பெரும் புள்ளிகள் சிக்க வாய்ப்புகள் உள்ளது. கடந்த 20 வருடங்களில் இலங்கையில் சொல்ல முடியாத அளவு ஊழல் இடம்பெற்று, நாடே குட்டிச் சுவராகியுள்ளது. இவர்கள் இந்தப் பணத்தை கொண்டு சென்று டுபாய், சுவிஸ் வங்கிகளில் போட்டு இருக்கிறார்கள். தற்போது சுவிஸ் அரசோடு இலங்கை பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.