சாவு எப்படி துரத்தியது ? அடிபட்ட காரில் இருந்து 3வயது மகளை தூக்கிக் கொண்டு ஓட வழியில் வந்த BMW மோதி அப்பா மகள் பலி !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கனடாவில் ஈழத் தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நடந்துள்ள சோகம், வேறு எந்தக் குடும்பத்திற்கும் வந்து விடக்  கூடாது. கனடாவில் வசித்து வரும், நீர்வேலியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கண்ணன் என்பவர் தனது காரில், 3 வயது மகளோடு சென்று கொண்டு இருந்தவேளை. எதிரே வந்த ஹொண்டா காரோடு மோதியுள்ளார். ஆனால் அதில் அவர் ஒருவாறு தப்பி விட்டார். இதனை அடுத்து அவரது கார் வீதியில் இருந்து விலகி புல் பற்றைக்குள் சென்றுவிட்டது.

அவர் தனது 3 வயது மகளை உடனே காரில் இருந்து துக்கிக் கொண்டு, அங்கிருந்து வீதிக்கு வந்து வீதியை கடக்க முற்பட்ட வேளை படு வேகமாக வந்த BMW கார் ஒன்று அவர்கள் இருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனை அடுத்து அங்கே வந்த பரா மெடிக்ஸ் , மருத்துவர்கள். அவர்கள் இருவரையும் வைத்தியசாலை எடுத்துச் சென்றார்கள். இருப்பினும் அப்பா மகள் இருவருமே இறந்துவிட்டதாக கனடா பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

கனடாவில் மிகக் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அங்கே உள்ள வீதிகளில் பொதுவாக வலது பக்கத்தில் தெறிக்கும் பனி, ஐஸ் கட்டியாக மாறி இருக்கும். அதன் மேல் காரின் சில்லு ஏறினால். வலது பக்க சில்லு வேகமாகவும் , இடது பக்க சில்லு சரியான வேகத்திலும் சுற்றும். இதனால் கார் உடனே திரும்ப ஆரம்பிக்கும். இதனை கட்டுப்படுத்துவது என்பது பெரும் கஷ்டமான விடையம். இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவரது 3 வயது மகள் ஆகியோர் ஆத்மா  சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.