கடைசி காலத்தில் பெரும் பீதியோடும் நீதிமன்ற வாசல் ஏறியும் கழிக்கும் மகிந்த !

அனுரா ஆட்சிக்கு வந்த உடனே, சில நடவடிக்கையில் இறங்கினார். அதில் ஒன்று ராஜபக்ஷர்களுக்கு இருந்த பாதுகாப்பை குறைத்தது. இதனால் மகிந்த மற்றும் அவரது முழுக் குடும்பமுமே பீதியில் உள்ளது. எங்கேயும் வெளியே செல்வது இல்லை. அவ்வூர் மக்கள் மத்தியில் அவருக்கு சிறிய அளவில் செல்வாக்கு இருப்பதால், ஒரு ஊரில் அடைந்து கிடக்கிறார். இன் நிலையில் தான் மகிந்த, தனது அடிப்பை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக  தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த ஆட்ச்சியில் இல்லாத போது கூட, அவர் வெளியே செல்வது என்றால் குறைந்த பட்சம் 90 பேர் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த நிலையில் தற்போது அது 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. காலை மதியம் இரவு என்று 20 பேர் மட்டுமே பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இதில் 60 பேர் அடங்குகிறார்கள்.  பீதியின் உச்சத்தில் இருக்கவேண்டும் என்றும், அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையில், அவரது கடைசிக் காலம் நகர்கிறது என்பது தமிழர்களுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே ?