Southport Court sobs: CCTV ல் கொலையை பார்க்கவே நடுங்கிய நீதிபதிகள்: பெரும் சோகம்

ஈவு இரக்கம் இன்றி, 3 பெண் குழந்தைகளை கொலை செய்து, அதன் பின்னரும் மேலும் சிலரை கொலை செய்ய முயன்றுள்ளார் Axel Rudakubana. இதில் ஒரு பெண் குழந்தை தப்பி ஓட முனைந்தும், அவரின் காலைப் பிடித்து இழுத்துச் சென்று பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் CCTVல் பதிவாகியுள்ளது. இதனை சவுத்போட் நீதிமன்றில் பொலிசார் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

ஆனால் நீதிபதியால் கூட அதனை பார்க முடியவில்லை. ஏன் என்றால் அந்தக் காட்சிகள் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. நீதிபதியே நடுங்கி விட்டார், அது பயத்தால் அல்ல. கொலையின் கொடூரத்தை பார்த்து. இது இவ்வாறு இருக்க, சவுத்போட் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று SKY-TVக்காக பேட்டி எடுத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், சாரா ஜேன், சோகம் தாங்க முடியாமல் TV கமராவுக்கு முன்னரே அழுது விட்டார். 

இதனைப் பார்த்த நபர்கள் அனைவருமே மிரண்டுபோய் உள்ளார்கள். தற்போது லண்டனில் பரவலாக பேசப்பட்டு வரும் விடையம் இந்தக் கொலைகள் தான். அது போக இப்படியான சைக்கோ நபர்களை எப்படி அரசு உள்ளே விட்டது ? இவர்கள் பின் புலம் என்ன என்று தெரியாமல் பிரிட்டன் அரசு எப்படி அகதிகள் அந்தஸ்த்தை கொடுத்தது ? என்று பெரும் விவாதங்கள் இடம்பெற்று வருகிறது. பிரிட்டன் அரசு மிகக் கடுமையான சட்ட திருத்தங்களை கொண்டுவரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.