அமெரிக்காவில் கடந்த 20ம் திகதி டொனால் ரம் பதவியேற்ப்பு நிகழ்வு நடந்தபோது, பலரது கண்கள் துணை ஜனாதிபதியின் குடும்பம் மேல் தான் இருந்தது. 1986ம் ஆண்டு பிறந்த உஷா பாலா என்ற பெண், பின்னர் வெயின்சை திருமணம் செய்து கொண்டார். உஷா ஒரு இந்திய வம்சாவழிப் பெண். தற்போது வெயின்ஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். அவரது மனைவி தான் உஷா. 2ம் பெண்மணி.
மேலும் சொல்லப் போனால் டொனால் ரம் ஆட்சிக் காலம் முடிந்த பின்னர், வெயின்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 90 சதவிகிதமான வாய்ப்புகள் உள்ளது. அப்படி அவர் வென்றால், மனைவி உஷா 1ம் பெண்மணியாகும் வாய்ப்பும் கிட்டும். உஷா வெயின்ஸ் ஒரு பிரபல சட்டத்தரணி ஆவார். சைவ சமயத்தில் மிகுந்த பற்று உடையவர். அவரது திருமணம் கூட சைவ முறையில், இந்தியாவில் தான் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.
2022 தொடக்கம் உஷா அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு, தனது கணவருக்கும் உதவி வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் பதவியேற்ப்பு நிகழ்வில் செய்த சிறு சிறு குறும்புகளைப் பற்றித் தான் முழு அமெரிக்காவுமே இன்று பேசிக்கொண்டு இருக்கிறது.