ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெற்க்கில் தோன்றிய காட்டுத் தீ, இன்று வரை அணையாமல் பற்றி எரிந்து பல்லாயிரம் கோடி டாலர்களை அழித்துள்ள நிலையில். வடக்கில் Castaic Lake என்ற பகுதியில் புதிதாக காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளது என்ற செய்தி மக்களை மேலும் புரட்டிப் போட்டு உள்ளது.
என்ற பகுதி ஒரு வனப் பகுதி ஆகும் 7,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அங்கே காடுகள் உள்ளது. இதனால் இனி அந்த தீயை எப்படி கட்டுப்படுத்துவது என்ற நிலை தோன்றியுள்ளது. ஏற்கனவே பல நூறு தீ அனைக்கும் படையினர், தெற்கில் போராடி வரும் நிலையில். தற்போது வடக்கு லாஸ் ஏஞ்சல்சுக்கும் தீ அணைக்கும் படையை அனுப்ப வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
தற்போது தீ ஏற்பட்டுள்ள பகுதியில், அமெரிக்காவின் ரகசிய அணு குண்டு பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இது வெடித்து சிதறினால்ப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. ஆனால் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. வீடியோ இணைப்பு.