One-in-12 people living in London is an illegal immigrant: 12 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் விசா இல்லாமல் இருக்கிறார்கள்

லண்டனில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் விசாவே இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இதனால் 12 பேரை எடுத்தால் அதில் ஒருவருக்கு விசா இருக்காது என்ற விகிதம் இருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ரம் தற்போது விசா இல்லாத நபர்களை கொத்துக் கொத்தாக அனுப்ப இருப்பது போல, பிரித்தானியாவும் கடுமையான நடவடிக்கையில் இறங்கக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காரணம் சமீபத்தில் நடந்த 3 கொலைகள் தான். இந்த நிலையில் பிரிட்டன் சென்றால், தற்போது உள்ள லேபர் அரசு அடுத்த முறை ஆட்சியை பிடிகவே முடியாத நிலை தோன்றும். அந்த அளவு லண்டனில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றில் 90% சத விகிதமான குற்றங்கள், அகதிகளாக வந்த நபர்களால், இழைக்கப்படுகிறது என்பது , பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

எனவே இன்னும் சில வாரங்களில் பொலிசார், கடுமையான வேட்டையில் இறங்க வாய்ப்புகள் உள்ளது. கடைகள் வியாபார நிலையங்கள் வைத்திருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 

Source : DM-UK