உக்ரைன் அதி நவீன ரிமோட் கன்றோல் ஆயுதங்களை கண்டு பிடித்து பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. நூறு மீட்டரில் இருந்து நூற்றுக் கணக்கான KM வரை இவை சென்று தாக்க வல்லவை. முதலில் உக்ரைன் ராணுவம் கண்டு பிடித்த தற்கொலை ட்ரோன்கள். தற்போது ரிமோட் கன்றோலர் மூலம் செயப்படும் பீரங்கிகள், அதன் பின்னர் அவர்கள், தற்போது கவச வாகனங்களையும், இது போல இயக்கி வருகிறார்கள்.
இதனால் ரஷ்ய ராணுவம் தடுமாறி வருகிறது. களத்தில் மனிதர்கள் தான் பயம் கொள்வார்கள். அதனால் கடும் தாக்குதல் என்றால் முன்னேற மாட்டார்கள். ஆனால் ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கப்படும் இது போன்ற சாதனங்களுக்கு பயம் ஏது ? மேலும் அழிக்கப்பட்டாலும் அது மனித உயிர் அல்லவே. எனவே அவை முன்னேறிச் செல்லும்.
தற்போது உக்ரைன் ராணுவம் கண்டு பிடித்துள்ள, 3 Long Range துப்பாக்கிகள் கொண்ட ரிமோட் கன்றோல் வாகனம், குண்டு மழை பொழியக் கூடியது. இதனை தாண்டி எவராலும் முன்னேற முடியாது. அந்த அளவு சுடு திறன் மிக்கது.