கடந்த டிசம்பர் மாதம் சீனா தான் தயாரித்த J20 ஸ்டெலத் விமானத்தை முதன் முறையாக உலகிற்கு காட்டியது. எந்த ஒரு ராடர் திரையிலும் மாட்டாமல் பறந்து செல்ல வல்லது என்றும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அதில் உள்ளதாகவும் சீனா அறிவித்து இருந்தது. இது அமெரிக்காவுக்கு கொடுத்த பெரும் பதிலடியாக சீனா கருதியது. ஆனால் இன்று(14) அமெரிக்கா தான் தயாரித்துள்ள புது B-21 வகை ஸ்டெலத் விமானத்தை முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.
சீன தயாரிப்பான J20 விமானத்தை விட இதில் அதி கூடிய வசதிகள் உள்ளதாகவும், இதனைப் போன்று 100 விமானங்களை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு ஆடர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த அதி நவீன B 21 ஸ்டெலத் விமானங்கள், 100ஐ அமெரிக்கா தயாரித்து, தனது வான் படையில் இணைக்க உள்ளது. இதனூடாக அமெரிக்காவின் வான் படை மிகப் பெரிய பலம் பொருந்திய வான் படையாக மாறும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சீனா தயாரித்துள்ள J20 ஸ்டெலத் விமானங்களில் என்ன, இருக்கிறது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது. விமானத்தை சீனா காட்டியுள்ளதே தவிர அதில் உள்ள விசேட அம்சங்களை அது, இதுவரை வெளியிடவில்லை என்பது கவலை தரும் விடையமாகவே உள்ளது.