புலிகளோடு சமாதானமாக போய் இருந்தால் அப்பாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்: நமால் ராஜபக்ஷ !

விடுதலைப் புலிகளோடு எனது அப்பா மகிந்த ராஜபக்ஷ, சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டு இருந்தால். அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கும் என நமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அதனைச் செய்யவில்லை. வேறு ஒரு முடிவை எட்டி இருந்தோம்.

அதனால் தான் இன்று நாங்களும் எங்கள் பிள்ளைகளும், இலங்கையில் சுதந்திரமாக மற்றும் நிம்மதியாக இருக்கிறோம் என்று நமால் மேலும் தெரிவித்துள்ளார். அன்று எனது அப்பா எடுத்த முடிவு மிக நல்ல முடிவு.

நாங்கள் செய்யும் அரசியலே நல்ல அரசியல். எங்களுக்கு என்ன சோதனை வந்தாலும் நாங்கள் இலங்கையர் என்ற போக்கில் தாம் நாம் இருப்போம் என்று கூறியுள்ளார் நமால். தற்போது நமால் ராஜபக்ஷ மீது காணி ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில். அவர் சிறையில் அடைக்கப்பட பெரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த கலக்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், பல விடையங்களை உளற ஆரம்பித்துள்ளார் நமால் !