NORTHOLTல் இறந்த ஈழத் தமிழர்: இதில் தப்பி ஓடிய 2 பேரை பொலிசார் கைது செய்து விட்டார்கள்

நேற்று அதிகாலை 4.40 க்கு நோத்ஹால்டில் நடந்த விபத்தில் ரஞ்சன் என்னும் ஈழத் தமிழர் இறந்து போனார். 4 இளைஞர்கள் சென்ற BMW கார் ரஞ்சன் பயணித்த Ford Focus கார் மேல் மோதியதால் இந்த விபத்து நடந்தது. காரில் பின் சீட்டில் இருந்த 2 இளைஞர்கள் விபத்து நடந்த சில நொடிகளில், அங்கிருந்து தப்பித்து விட்டார்கள். இவர்கள் தப்பி ஓடும் வேளை பொலிசார் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள்.

ஆனால் பொலிசார் 2 பேரே அவ்விடத்தில் இருந்ததால், அவர்களால் 4 பேரைக் கையாள முடியவில்லை. இன் நிலையில், இன்று மதியம் மெற்றோ பொலிடன் பொலிசார் தப்பிய இருவரையும் கைது செய்து, வாக்குமூலம் பெற்றுள்ளார்கள் என்று, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கைதான 2 பேரும் கொடுத்த தகவலுக்கு அமையவே இவர்கள் கைதாகியுள்ளார்கள். மேலும் பொலிசார் அவ்விடத்தில் உள்ள CCTV கமராக்கள் உள்ள கடைகளில் விசாரணை நடத்தி பதிவான வீடியோக்களை கேட்டுள்ளதாகவும், நோத்ஹால்டில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. பரிதாபமாக இறந்து போன ரஞ்சனுக்கு 2 பிள்ளைகள் இருப்பதாக மேலும் அறியப்படுகிறது.

அன்னார் ஆத்மா ஷாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக …