சர்வதேச நீதிமன்றம்(ICC) மீது அமெரிக்க அதிபர் டொனால் ரம் தடைகளை விதித்துள்ளார். இதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்கா இனி எந்த வகையிலும் , நிதி கொடுக்காது, மேலும் சொல்லப் போனால் அதன் அதிகாரிகள் நீதிபதிகள் அமெரிக்கா வர தடை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஸ்பெஷல் கட்டளையை( ) ரம் பிறப்பித்துள்ளார். இவை அனைத்துமே , இஸ்ரேல் பிரதமர் நெத்தின் யாகுவை காப்பாற்றவே நடந்துள்ளது
சில வாரங்களுக்கு முன்னர் தான் இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெத்தின் யாகூவை, கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து இருந்தது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடும் குண்டு வீச்சு தாக்குதலில், பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது ஒரு இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஆனால் ரம் இதனை ஏற்க்க தயாராக இல்லை.
இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான பிடியாணையை வாபஸ் வாங்கும்படி, ரகசியமாக கேட்டார் ரம். அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. உடனே தடை உத்தரவுகளை, தனது சிறப்பு அதிகாரத்தை பாவித்து போட்டுள்ளார்.
தனக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை பாவித்து, ரம் அடிக்கடி அதிரடி காட்டி வருகிறார். தனக்கு அடி பணியாத நாடுகள் மீது வரிகளை போடுவதும். ஏற்றுமதி தடைகளையும் ரம் விதித்து வருகிறார். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
Source : BBC