சோக்கு பண்ணி திரிந்த USAID : வாலை ஒட்ட நறுக்கிய எலான் மஸ்க் டீம்: ஆனால் பட்டினி சாவுகள் அதிகரிக்கும் !

யு.எஸ் ஏய்ட் தொண்டு நிறுவனம் , தனக்கு கிடைக்கும் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை அநாவசியாமாக செலவு செய்து வந்துள்ளது. அதாவது யுஸ்.எய் நிறுவனத்தின் சாதாரண ஊழியர் கூட பிசினஸ் கிளாசில் பயணித்துள்ளார்.

குறிப்பாக சொல்லப் போனால், லண்டனில் இருந்து இந்தியா செல்வது என்றால், விமானச் செலவு , 500 டாலர் என்றால். யுஸ் ஏய்ட், நிறுவன ஊழியர்கள் 2,000 அமெரிக்க டாலர்களை செலவு செய்து சொகுசாக பயணித்து உள்ளார்கள்.

இவை அனைத்தையும் எலான் மஸ்க் மற்றும் , டொனால் ரம் அரசு கண்டு பிடித்து , யுஎஸ். எயிட் அமைப்புக்கு கொடுத்து வந்த நிதியை நிறுத்தியுள்ளது. இதனால் இந்த சுகங்களை அனுபவிக்காத பலர் வேலையை இழக்க உள்ளதோடு . உண்மையில் கொஞ்ச உதவிகளை பெற்று வந்த மக்கள் கூட , இனி எந்த ஒரு உதவிகளையும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை சூட்டான் போன்ற நாடுகளில், இதனால் பிள்ளைகள் இறக்க கூடும் என்று கூறப்படுகிறது. பணத்தை எடுத்து, 70% சத விகிதத்தை தமக்கு செலவு செய்து விட்டு, வெறும் 30% சத விகிதத்தை மட்டுமே, இந்த நிறுவனம் மக்களுக்கு செலவு செய்துள்ளது.