சுவீடனில் துடிக்க துடிக்க இறந்து போன 10 குழந்தைகள்: துப்பாக்கியால் சுட்ட நபர் !

ஸ்வீடனில் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. 

ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகின்றனர். இந்த பள்ளியில் நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். 

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் பலத்தகாயமடைந்துள்ளனர்.துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் காவல்துறையினர்  தெரிவித்தனர் . 

ஓரிப்ரோவில் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்வதால், உதவி  தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க மக்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறது.