ரஷ்யாவுக்கு உள்ளே சுமார் 488 சதுர மைல் பரப்பளவை உக்ரைன் ராணுவம் இன்றுவரை கைப்பற்றி வைத்துள்ளது. இந்த இடத்தை கைப்பற்ற உக்ரைன் ராணுவம், திட்டம் தீட்டிய வேளை. படை வீரர்களுக்கு கூட தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதனை உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கவில்லையாம். அந்த அளவு ரகசியமாகவே , தனது படையை நகர்த்தியுள்ளது உக்ரைன்.
ரஷ்யாவின் கேஷ் நகர், அதனை அண்டிய பெரும் பகுதி தற்போது, உக்ரைன் படைகள் வசம் உள்ளது. அங்கே வெளிநாடுகள் கொடுத்த பல கனரக ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் பாவிக்கிறது. இதில் முக்கியமானது, தரையில் இருந்து விமானங்களை தாக்கும் ஏவுகணைகள். இதனால் ரஷ்யா தனது விமானப் படையை அங்கே அனுப்ப தயக்கம் காட்டி வருகிறது. ஒரு போர் விமானம் விழுந்தால் கூட, பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் அல்லவா.
கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கேஷ் பகுதி, உக்ரைன் படைகள் வசமே இருக்கிறது. இந்தப் பகுதியை மீட்க்க பல தடவை ரஷ்யப் படைகள் வந்து பலத்த சேதமடைந்து பின் நோக்கிச் சென்று விட்டது.
நாளுக்கு நாள் இதன் விஸ்தரிப்பும் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. ஆனால் ரஷ்யாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கே இருப்பது எல்லாமே ரஷ்ய மக்களது வீடு. தனது சொந்த நாட்டின் மீதே குண்டு போட வேண்டிய நிலையில் ரஷ்யா இருக்கிறது என்பது மிகவும் வேடிக்கையான விடையம்.