அடுத்து அடுத்து கொலை: இலங்கையில் அரங்கேறும் மர்மக் கொலைகள் என்ன நடக்கிறது ?

மாவனெல்ல, பெலிகம்மன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயது நபர் ஒருவர், நேற்று (2) காலை குளியலறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இறந்தவர் கும்புல்ஒழுவ, புடலுஓய பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த சம்பவம் குறித்து, இன்று காலை ஹோட்டல் அறையில் இருந்து தண்ணீர் வழிந்ததை கவனித்த ஹோட்டல் முகாமையாளர், அந்த நபரைத் தேடிச் சென்றபோது அவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்டறிந்தார். 

இறந்தவரின் அறையில் மது அருந்தியதற்கான சாட்சியங்கள், மதுபான பாட்டில், சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் பல்வேறு மருந்துகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவனெல்ல பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.