நடிகை ஸ்ரீவித்யா ஒரு பேட்டியில் கமல்ஹாசனுடனான தனது காதல் மற்றும் பிரேக்-அப் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். “நானும் கமல்ஹாசனும் காதலித்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையில் இருப்பவர்கள், ரசிகர்கள், என் வீட்டில் இருப்பவர்கள், கமல்ஹாசனின் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இது தெரிந்ததே” என்று ஸ்ரீவித்யா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஸ்ரீவித்யா கூறுகையில், “கமல்ஹாசன் என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறினார்கள். அதேபோல், கமல்ஹாசனை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் குடும்பத்தினரும் கூறினார்கள். ஆனால், ஒரு நாள் என் அம்மா என்னையும் கமல்ஹாசனையும் சந்தித்து, ‘உங்கள் இருவருக்கும் திரைத்துறையில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. நீங்கள் இருவரும் உங்கள் கவனத்தை முழுவதுமாக நடிப்பில் செலுத்துங்கள்’ என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து ஸ்ரீவித்யா கூறுகையில், “என் அம்மா அப்படிக் கூறியதை கமல் சார் எப்படி புரிந்து கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அதன் பிறகு, அவர் என் வீட்டை விட்டு சென்றார். நான் அவர் திரும்பி வருவார் என்று காத்திருந்தேன். ஆனால், திடீரென வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி கிடைத்தது. அந்த நிமிடம் நான் உறைந்து போனேன். என் கண் முன் இருந்த எல்லாமே மறைந்துவிட்டது போல உணர்ந்தேன்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்த பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா இடையேயான காதல் மற்றும் அதன் முடிவு குறித்து இதுவரை பல ஊகங்கள் நிலவின. இப்போது, ஸ்ரீவித்யாவே இந்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் அதிகமாக பேசி வருகின்றனர்.