பிரிட்டனி Leeds பகுதில் உள்ள Harehills Lane தரித்து நின்ற நபர் ஒருவரிடம் சென்று, சரியாக குளிர்கிறது நீங்கள் போகும் வழியில் என்னை இறக்கி விட முடியுமா என்று கேட்டுள்ளார் குபாலி என்னும் இந்த 20 வயது இளைஞர். இளகிய மனம் கொண்ட அந்த நபர், சரி பாவம் என்று இந்தக் குபாலியை காரில் ஏற்றிச் சென்றவேளை. தீடிரென அவர் சரமாரியாக அந்த வாகன ஓட்டுனர் முகத்தில் குத்தியுள்ளார்.
மிகவும் கடுமையாக பல தடவை குபாலி தாக்கியதால், அவர் தாடை, மூக்கு உடைந்து ரத்தம் ஆறாகப் பெருகியது.. இதேவேளை அவரது மோபைல் போன் மற்றும் பர்ஸ்சை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து தப்பி விட்டார் குபாலி. விடுவார்களா பொலிசார் ? . தீவிரமாக தேட ஆரம்பித்தார்கள். கார் முதலில் தரித்து நின்ற இடத்தில் உள்ள CCTV மகராவைப் பார்த்து, குபாலியை அடையாளம் கண்டு பிடித்த பொலிசார் அவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்த…
அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தக் குபாலி என்பவர் பிறவியிலேயே ஒரு “ரவுடி” போல. சிறையிலும் சும்மா இருக்கவில்லை. அங்கே பெரும் குற்றச் செயல்கள் செய்த சக சிறைக் கைதிகளோடும் இவர் வம்பு செய்ய தவறவில்லை. நேற்று முன் தினம் , சிறையில் குபாலி பிணமாகக் கிடந்துள்ளார். பொலிசார் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.