சாவு திரத்திய சிறுவன்: வெடித்து சிதறிய அமெரிக்க விமானத்தில் எப்படித் தப்பினான் ?

பலர் வீட்டில் நாய் குட்டிகளை வளர்ப்பார்கள். அது பலவேளைகளில் எம் உயிரைக் காப்பாற்றிக் கூட இருக்கும். ஆனால் இங்கே நடந்தது சற்று வித்தியாசமான விடையம். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான, ராணுவ ஹெலியுடன் மோதி, வாஷிங்டனின் போடோமேக் ஆற்றுக்குள் விழுந்தது விட்டது. இதில் பயணித்த 64 பேரும் உயிரிழந்துள்ள நிலையில். ஹெலியில் பயணித்த ராணுவத்தினர் பற்றி அமெரிக்கா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இது இவ்வாறு இருக்க, குறித்த விமானத்தில் தனது நாய் குட்டியோடு பயணிக்க வந்துள்ளார் Jon Maravilla என்னும் 19 வயது இளைஞர். அவரது நாய் குட்டி சற்று பெரிதாக இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். பல முறை அவர் போராடியும் , நுளைவு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தனது நாய் குட்டியுடன் அவர் மீண்டும் வீடு திரும்பி விட்டார். ஆனால் விமானம் புறப்பட்டு சில மணி நேரத்தில் இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. 

இதில் தான் பயணிக்க இருந்ததாக போஸ் ஒன்றை போட்டுள்ளார் Jon Maravilla. இதுவே தற்போது வைரலாகி வருகிறது. இவரை சாவு திரத்தி இருந்தாலும் நாய் குட்டியால் இன்று அவர் உயிரோடு உள்ளார் என்பதே உண்மையாகும். 64 பேரது உடல்களையும் மீட்ப்புப் பணியாளர்கள் மீட்க்கவில்லை 30 பேரது உடல்களையே அவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.