4000 கோடி அரண்மனையில் இன்றும் வாழும் இளவரசி அனன்யா: இவர் ஒரு இந்தியர் !

இளவரசி அனன்யா ராஜே சிந்தியா, உலகில் உள்ள மிக முக்கிய அழகான 50 பெண்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறது.  400 400 அறைகளைக் கொண்ட மாளிகையில், இன்றும் மகாராணியாகவே வசித்து வருகிறார். 

இந்திய துணைக் கண்டத்தை, பல ஆயிரம் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மன்னர்களின் குடும்பங்களை பிரிட்டன் நூதனமான முறையில் அழித்து வந்தது. அவர்கள் மீண்டும் தலை தூக்க கூடாது என்பதில் பிரிட்டன் அரசு மிகக் கவனமாக இருந்தது. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இறுதியாக சங்கிலிய மன்னனுக்கும் பிரிட்டிஷாருக்கும் நடந்த போரில், சங்கிலிய மன்னன் தேற்று இறந்தவேளை. அவரது குடும்ப உறுப்பினர்களை, இந்தியா கொண்டு சென்று கோவாவில் இறக்கி. மன்னர் குடும்பத்தையே சிதைத்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால் பார்த்தீர்கள் என்றால். தமது ராஜ குடும்பத்தை மட்டும் மிகவும் துல்லியமாக அவர்கள் பிரிட்டனில் பாதுகாத்து வருகிறார்கள்.

இன்று நாம் பார்க்க இருப்பது, இந்தியாவில் பெரும் மன்னராக இருந்த, சதிரபதி சிவாஜி அவர்களின் பாதுகாப்பு படைப் பிரிவில் இருந்தவர் தான், அனன்யாவின் முன்னோர்கள். அதன் பின்னர் அவரது முன்னோர்கள் மன்னராக மாறி, பரோடாவில் Scindia, என்னும் இடத்தில் கோட்டையைக் கட்டி ஆட்சி புரிந்து வந்துள்ளார்கள். 1731 தொடக்கம் இவர்கள் பரோடாவில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்கள். அவர்கள் வழிவந்த Jyotiraditya Scindia, என்பவரின் மகள் தான் அனன்யா சிந்தியா. இவருக்கு 21 வயது ஆகிறது.

இன்றும் ஒரு மகாராணியைப் போல , சுமார் 4,000 கோடி ரூபா மதிப்பிலான அரண்மனையில் வாழ்கிறார். இந்த அரண்மனையை “ஜெய் விலாஸ் மாளிகை” என்று அழைக்கிறார்கள். பல இந்திய மன்னர்களின் வம்சாவழியினர் யார் ? யாராவது மிஞ்சி இருக்கிறார்களா என்றே தெரியாத நிலை இருக்கும் போது. இன்றும் அடையாளத்தோடு வாழ்ந்து வருகிறார் அனன்யா. அவரது மொத்த சொத்து மதிப்பு, 8,000 கோடி என்கிறார்கள். அவரிடம் இன்றும் மன்னர்கள் பாவித்த வைர கிரீடங்கள், வாள்கள், அணி கலன்கள், வைர நகைகள் உள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மகாராணி பிரியதர்ஷினி ராஜே ஆகியோரின் மகளான அனன்யா ராஜே சிந்தியா அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார். ஜெய் விலாஸ் அரண்மனை 4,500 முதல் 5,000 ரூபாய் கோடி மதிப்புள்ள இந்த அரண்மனை, கட்டடக்கலையில் தனித்து நிற்கிறது. 1874-ம் ஆண்டு மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, பிரெஞ்சு கட்டடக் கலைஞர் சர் மைக்கேல் ஃபிலோஸால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12,40,771 சதுர அடி பரப்பளவில், 400 அறைகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையில் பிரமாண்டமான தர்பார் ஹால் அதன் ஆடம்பரத்தின் சிறப்பம்சமாக திகழ்கிறது.

இந்த அரண்மனையின் மற்றொரு தனித்துவம் என்னவென்றால் அங்கு இருக்கும் 3500 கிலோ எடை கொண்ட சரவிளக்கு என்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய விளக்காக கருதப்படும் இதை அங்கு வைப்பதற்கு முன்பு பத்து யானைகளை அதன் மீது பத்து நாள்கள் நடக்க வைத்து அதன் வலிமையை சோதித்ததாகவும் கூறப்படுகிறது. 560 கிலோ தங்கத்தால் ஆன சுவரை கொண்ட அறை, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பல ஆடம்பர தனித்தனி அறைகள், அருங்காட்சியங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த அரண்மனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரண்மனையின் பிரம்மாண்டத்தை பொதுமக்களும் நேரில் பார்க்கும் வகையில், ஜெய் விலாஸ் அரண்மனை, செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும், நேரில் சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் பிரான்சில் நடந்த மிக முக்கிய நிகழ்வு ஒன்றில், அனன்யா கலந்துகொண்டதன் மூலம், அவரைப் பற்றி உலகமே தற்போது பேச ஆரம்பித்துள்ளது. அவரை ஐரோப்பிய அரச குடும்ப அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் அதே மரியாதையோடு பிரன்ஸ் நாடு நடத்தியுள்ள விடையம். இந்தியர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.