லண்டனிலும் பெரியாரா -திராவிடமா என்ற அடிபாடு: சீமானின் குண்டர்கள் ரகளை !

ஒரு முட்டாளை தலைவனாக ஏற்றால் என்ன நடக்கும் என்பதற்கு, தற்போது தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் உணர்ந்துள்ளார்கள்.  ஆனால் வடி-கட்டிய முட்டாளை தலைவனாக ஏற்றால், என்ன நடக்கும் என்று லண்டனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பெரியார் பற்றி ஏதோ 7 பேர் கூடிப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்ட, சீமானின் தம்பிகள், பலர் திரண்டு சென்று நடந்த கூட்டத்தை குழப்பி கூச்சல் போட்டு. சீமான் மேடையில் பேசிய தகவலை வைத்து வாதாடி உள்ளார்கள் லண்டனில்.. சிங்களவன் தமிழனை பிரித்தது ஓய்ந்து போக..

தற்போது சிங்களவனை மிஞ்சிய நஞ்சாக மாறியுள்ளார் இந்தச் சீமான். ஈ.வே ராமசாமி என்று அறியப்படும் பெரியார் ஒரு தமிழரே அல்ல.. என்று சீமானின் தம்பிகள் வாதாடியுள்ளார்கள். “தமிழ்” ஒரு காட்டு மிராண்டி மொழி என்று, பெரியார் சொன்னாதாக சொல்லும் இந்த தம்பிகள்,  முழு வீடியோவைப் பார்க்கவே இல்லை. அதாவது தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழியாக மாறிவிடக் கூடாது. காலத்திற்கு ஏற்றால் போல நாமும் மாறவேண்டும் என்று பெரியார் சொன்ன உரை அது. அதனை வெட்டி ஒட்டி நாம் தமிழர் கட்சி , உறுப்பினர்கள் இன்ஸ்டாவில் போட, அரை குறை படிப்பு முடித்த இந்த சீமானின் லண்டன் தம்மிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள் பாருங்கள்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், நாம் ஆதி காலத்தில் பாவித்த “”லை”” யென்னா.. மற்றும் “”ளை”” யென்னாக்களை மாற்றி அமைத்தவரே பெரியார் தான். ஏன் மாற்றி அமைத்தார் ? தமிழ் கம்பியூட்டர் யுகத்தில் உள்ளதால், அது மாறவேண்டும். நவீன காலத்தோடு தமிழ் ஒத்து வாழ்ந்தால் தான் தமிழ் வாழும் இல்லையே அழிந்து போய் விடும் என்று கூறியவர் பெரியார். இதனைக் கூட சிலர் வெட்டி ஒட்டி, எடிட் செய்து பெரியாருக்கு எதிராகப் போடுவார்கள். அதனையும் சில தமிழர்கள் உடனே நம்பி விடுவார்கள்..

வேதனை தரும் ஒரு விடையம், ஈழத் தமிழர்கள் ஆகிய எங்களுக்கு இந்திய உள்ளூர் அரசியல் தேவை இல்லை. பெரியாரா திராவிடமா என்பது தேவையும் இல்லை. நாங்கள் அதற்கு அப்பால்பட்டவர்கள். இந்திய சாதிச் சண்டை, அரசியல், ஈழத் தமிழர்களுக்கு அவசியம் அற்ற ஒன்று. எங்கள் தொப்புள் கொடியான தமிழக தமிழர்களின் ஆதரவு தான் வேண்டும். அதுவும் ஒருமித்த ஆதரவு. அது யாராக இருந்தாலும் சரி. அதிமுக, திமுக, பஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், எதுவாக இருந்தாலும் அவர்கள் ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுப்பார்களா ? என்பதே முக்கியம்.

இதனை தவிர்த்து ஏனைய எல்லாக் கட்சிகளையும், ஈழத் தமிழர்கள் வெறுத்து ஒதுக்கி. ஒரே ஒரு… அதுவும் நலிந்து போன கட்சியான நாம் தமிழர் கட்சி தான் எமக்கு வேண்டும் என்று ஒரு தனிப்பட்ட பாதையை எடுப்பது. ஈழத் தமிழர்கள் தம் தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கு சமன் ! முதலில் இந்த சீமான் என்னும் வடி கட்டிய முட்டாளிடம் இருந்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் ! பரந்த நோக்கில் செயல்பட வேண்டும் !  வீடியோ கீழே இணைப்பு