தமிழ் கடைகளுக்கு உள்ளே பாயும் இமிகிரேஷன்: தமிழர்களே ஜாக்கிரதை – VIDEO

லூட்டனில் உள்ள தமிழர் கடை ஒன்றினுள், நேற்று முன் தினம்(சனிக்கிழமை) காலை இமிகிரேஷன் அதிகாரிகள் சென்றுள்ளார்கள். இவர்கள் அங்கே வேலை செய்த 3 பேரையும் விசாரணை செய்து. அவர்களது விசா பற்றி விசாரணை செய்த வேளை. ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் கடை உரிமையாளருக்கு 20,000 ஆயிரம் பவுண்டுகள் தண்டப்பணம் அறவிட நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

இதேபோல கெபாப் உணவுக் கடை ஒன்றினுள், பிரிட்டனின் போடர் கன்றோல் அதிகாரிகள் செல்லும் காட்சியும். அவர்கள் அப்படியே மேல் வீடு சென்று அங்கே உறங்கிக்கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரிக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகியுள்ளது. இதில் துருக்கி நாட்டவர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரை பிடித்து நாடு கடத்த இருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் ஏற்கனவே பல குற்ற நிகழ்வுகள், தஞ்சம் புகுந்த நபர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் விசா இல்லாமல் இருக்கும் நபர்களை உடனே பிடித்து நாடு கடத்த பிரிட்டன் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இப்படி நடக்கப் போகிறது என்பது தொடர்பாக அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தி ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டும் இருந்தது நினைவிருக்கலாம்.

தற்போது பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும், லேபர் அரசு பெரும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. பிரிட்டனில் பல குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால், அரசு ஏதாவது ஒரு நடவடிக்கையில் இறங்கியே தீரவேண்டும் என்ற முடிவை எட்டியுள்ளது. கீழே வீடியோ இணைப்பு.