கீழே வீடியோ இணைப்பு:
மாவீரர் குடும்பத்தை இப்படி பொது வெளியில் தூசனத்தால் திட்டிய சீமான் உடனே ஈழத் தமிழர்களின் மன்னிப்பு கேட்க்க வேண்டும்
எமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அண்ணன் மகனை(பெறா மகனை) பொது வெளியில் வைத்து (தூசனத்தால்) தகாத வார்தையால் திட்டியுள்ளார் சீமான். புதிய தலைமுறை TV யின் பெண் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கே. தலைவரது பெறா-மகனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார் . அதுவும் ஒரு பெண் நிருபர் என்று கூடப் பாராமல் அவர் பேசியது, அவரின் முகத்திரையை கிழித்துள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களை அவர் செருப்பால் அடித்தது போல உள்ளது.
ஆமைக் கறி தந்தார்கள், AK-47 துப்பாக்கியை சுடத் தந்தார்கள், என்னைத் தான் தமிழகத்தில் ஒரு போராட்ட அமைப்பை கட்டியெழுப்பச் சொன்னார்கள் என்று, பல நடக்காத சம்பவங்களை சொல்லி மக்களை இது நாள் வரை ஏமாற்றி வந்துள்ளார். அதனைக் கூட விட்டு விடலாம் (பாவம் பிழைப்புக்குச் செய்கிறான் என்று). ஆனால் தேசிய தலைவரது குடும்பத்தையே கெட்ட வார்த்தையால் திட்டும் தைரியத்தை இவருக்கு யார் கொடுத்தது ? எந்தப் பொதுவெளியில் சீமான் திட்டினாரோ. அதே பொது வெளியில் இவர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். அதுவரை ஈழத் தமிழர்களாகிய நாம் மன்னிக்க மாட்டோம்.
தமிழகத்தில் தந்தை பெரியாரைப் பற்றி கடும் இழிவாகப் பேசிவிட்டு. அதனால் பொங்கிய எதிர் அலையை சமாளிக்க, சீமான் உடனே கையில் எடுத்துக் கொண்டது எமது தேசிய தலைவரை. தமிழ் நாட்டில் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கும் மதிப்பை வெகுவாக குறைக்கும் வகையில் சிமான் செயல்பட்டு வருகிறார். இவை அனைத்தும் நடப்பது, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தான்.
இனி யாராவது வந்து சீமானுக்கு பணம் கேட்டால், முதலில் மன்னிப்புக் கோரச் சொல்லுங்கள். வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளை இழந்து வெளிநாடுகளில் வசித்து வந்தாலும், ஈழத் தமிழர்களிடம் கடைசியாக மிஞ்சி இருப்பது, எமது மானம் ஒன்று தான். ஆனால் இன்று அதனையும் செருப்பால் அடித்து எம்மை ஒரு முட்டாள் போல ஆக்கி, எமது பணத்தில் A/C ஆடம்பர வீட்டில் வாழ்ந்து வருகிறார் சீமான். குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நாம் உழைக்கும் பணத்தை அவருக்கு அனுப்ப, அவர் செருக்கெடுத்து ஆடித் திரிகிறார். இவர் BJP கட்சியின் ஊது குழல் என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது.
தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பற்றிப் பேச, சீமானுக்கு மட்டும் இல்லை அவன் அப்பனுக்கு கூட எந்த அறுகதையும் இல்லை. ஈழப் போராட்டத்தில் தங்கை துவாரகா , சாள்ஸ் அன்ரனி ,என்று பலரை மாவீராகக் கொடுத்து இன்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் தலைவரது குடும்பத்தைப் பற்றி, எவரும் பேச அனுமதிக்க மாட்டோம். என்ற உறுதிமொழியை நாம் எடுப்பது நல்லது.
கீழே வீடியோ இணைப்பு: