யாழில் அம்மாவுக்கு எதிரே மகனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கும்பல்- இணுவில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் இந்தக் கும்பல்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது, தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சிக்கிய இன் நபரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் தன்னுடன் வந்த அனைவரையும் காட்டிக் கொடுத்து விட்டார். இதனால் அனைவரையும் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இந்த இளைஞரை தாக்கியது வேறு யாரும் அல்ல, அவரது குடும்ப உறவினர்கள் தான். ஆனால் தமிழர்களின் பண்பாடு, எங்கே போனது ? இது போன்ற அசிங்கமான சம்பவங்கள் யாழில் நடைபெற்று வருகிறது.