Storm Éowyn : இன்னும் 45 மணி நேரத்தில் பிரிட்டனை தாக்க உள்ள கடும் புயல் 90MPH காற்று

பிரிட்டனில் இன்னும் 45 மணி நேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமை 90MPH மைல் வேகத்தில் கடும் காற்று வீச உள்ளது. இந்தக் காற்றில் பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு வேறு இடங்களில் அவை சென்று தாக்கக் கூடும் என்று மெற்றோ பாலிடன் பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனால் தமிழர்களே கவனமாக இருப்பது நல்லது.

மேலும் எந்தப் பகுதியில் அதி கூடிய காற்று நிலவும் என்ற வரைபடத்தையும் மெற்றோ வானிலை மையம் வெளியிட்டுள்ளது. கூடவே குளிர் காற்றும் வீச உள்ளதால் வளமைக்கு மாறாக கடும் குளிர் நிலவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளி காலை முதல், கம்பிரியா, மேசி சைட், லங்காஸ்டர், கடும் காற்று இருக்கும் எனவும் இது லண்டனையும் தாக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு சூறாவழி Storm Éowyn என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.