நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பிரபாகரன் இணைந்த புகைப்படத்தை எடிட் செய்தது தானே என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளார்.
வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். கிராமப்புற கதைக்களத்துடன் உருவான இந்த இரண்டு படங்களும், கலை ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை. இந்நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் தான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்ததாக கூறியுள்ளார்.