முள்ளிவாய்க்கால் போல மாறியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்- பாருங்கள் பேரழிவை !

லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட பெரிய காட்டுத்தீயால் 12,000 வீடுகள் எரிந்து சாம்பலாகி, 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருகாலத்தில் நட்சத்திரங்களின் சொர்க்கமாக இருந்த இந்த பகுதி, தற்போது சுடுகாடாக மாறியுள்ளது. 

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில், ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும்  பெரும் காட்டுத் தீ,  இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 

12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது தீயணைப்பாளர்கள் பாலிசேட்ஸ், ஈட்டன் மற்றும் ஹர்ஸ்ட் தீக்களை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். குறிப்பாகச் சொல்லப் போனால், முள்ளிவாய்க்கால் தான் நினைவுக்கு வருகிறது.