கொலை குற்றவாளியின் இசை பிபிசி-யில் விளம்பரப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புகள் வந்தப்பின்னும், அந்த இசையை, பிபிசி தனது தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2008ஆம் ஆண்டு மே 10 அன்று, தெற்கு லண்டனில் உள்ள பேக்கரியில், 16 வயதான ஜிம்மி மிசன் என்ற சிறுவனை ஜேக் ஃபாரி என்பவர் கொலை செய்தார்.
ஜிம்மி மீது கண்ணாடி பாத்திரத்தை எறிந்ததில், அவருக்கு கழுத்தில் ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குற்றத்திற்காக ஜேக் ஃபாரிக்கு, 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 35 வயதான அவர் ஜூன் 2023 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின், முகமூடி அணிந்த ட்ரில் ஆர்ட்டிஸ்ட் ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்த நிலையில், அவர் பிபிசி 1Xtra இல் காட்சிப்படுத்தப்பட்டார். அவரது இசை பாடல்களில் ஒன்றில், ஜிம்மியின் கொலைக்கு தொடர்புடைய விவரங்களை அவர் குறிப்பிடுவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் ஜிம்மி மிசனின் பெற்றோர்கள்,
சிறைச்சாலையானது தங்கள் மகனின் கொலையாளிக்கு மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தற்போது அவர் ராப் பாடகர் ஆவார். அவருடைய பாடல்கள் BBC ரேடியோ 1Xtra- வில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினர்.
Source : SUN