சவுதி அரேபியா தங்கள் நாடும் தொழில் நுட்ப்பத்தில் முன்னேறி உள்ளது என்று காட்ட, முதல் முறையாக ஒரு humanoid றோ-போவை தயாரித்துள்ளது. இதனை அறிமுகம் செய்ய ஒரு பெரும் விழாவை எடுத்தது சவுதி அரசு. ஆனால் விழாவில் நடந்த விடையம் , வேறுமாதிரியாக அமைந்துவிட்டது.
சவுதியில் உள்ள என்ற Saudi robotics company QSS கம்பெனியால் இந்த றோ-போ தயாரிக்கப்பட்டு, இதற்கு மொகஹமெட் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கே அல்- அரேபியா தொலைக்காட்சிக்கு வேலை பார்க்கும், பெண் அறிவிப்பாளர் வந்து இருந்தார். அவர் அந்த றோ-போவை பேட்டி கண்டார். அந்த நேரம் பார்த்து அது திடீரென அவரது பின் புறத்தில் லேசாக தன் கைகளால் தட்டியது. இதனால் அவர் சற்றுத் திணறிப் போனார், மேலும் சொல்லப் போனால் அதிர்ச்சியடைந்து விட்டார்.
இந்த றோ-போ ஏன் இப்படிச் செய்தது என்று இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லையாம். மனிதர்களுக்கு தான் ஆசை வருமா என்ன ? றோ-போக்களுக்கு வந்தால் தவறா ? அதுவும் மனித வடிவில் இருப்பதனால். ஆசை யாரைத் தான் விட்டது என்று கிண்டல் அடிக்கிறார்கள் நிகழ்வைப் பார்த்த நெட்டிசன்கள்.
Source : UNILAD