UK put boots on the ground in Ukraine: ரஷ்யாவோடு சொறியும் பிரிட்டன் ஏவுகணைகளை திசை திருப்பும் புட்டின்

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியாக மனிதனைக் கடிப்பது போல, பிரிட்டன் தற்போது நடத்தும் பேச்சுவார்த்தை படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உக்ரைன் அதிபரோடு பிரிட்டன் பிரதம் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதனூடாக முதல் தடவையாக உக்ரைன் மண்ணில், பிரிட்டன் துருப்புகள் காலடி வைக்க இது ஏதுவாக அமையலாம். பிரித்தானியா ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுப்பதையே புட்டின் கடுமையாக எச்சரித்து வரும் நிலையில்.

பிரிட்டன் படைகள் உக்ரைன் மண்ணில், காலடி எடுத்து வைப்பது என்பது ஒரு பெரும் அழிவுக்கு தான் வழிசமைக்கும் என்று அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதேவேளை பிரான்ஸ் நாட்டு அதிபரும் தனது, படைகளை உக்ரைனுக்கு அனுப்ப திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது இவ்வாறு இருக்க, ரஷ்யா தனது அணு குண்டு ஏவுகணைகளை பிரிட்டன் நகரங்களை குறிவைக்கும் விதத்தில் திசை திருப்பி உள்ளதாக மொஸ்க்கோ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் படைகள் நேருக்கு நேராக ரஷ்ய படைகளோடு மோதாவிட்டாலும். அவர்கள் உக்ரைன் படைகளுக்கு உதவுவது பெரும் ஆபத்தான விடையம். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஏன் இப்படி ஒரு முடிவை எட்டியுள்ளார் என்பது தான் , மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

Source : BBC