சூர்யா தனது 46வது படத்தை பிரபல மலையாள இயக்குனர் கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா ஜெய்பீம் படத்துக்கு பிறகு கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். அண்மையில் சூர்யவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா பிரமாண்ட வெற்றிப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கங்குவா படத்தை கொண்டாட ரசிகர்கள் தவறியதால் சூர்யா தோல்வியடைந்தார். படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் சூர்யாவை கலங்கடித்தன.
இந்த சூழலில் சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறாத். சூர்யா45 படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதில் 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் த்ரிஷா, ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் 46வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் எடுக்க உள்ளதாக தகவ வெளியகி உள்ளது. சூர்யாவுக்காக கதையை மலையாள இயக்குநர்கள் அமல்நீரத் மற்றும் பாசில் ஜோசப் எழுதியுள்ளனர். இருவரும் சூர்யாவின் 46வது கதையை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமல்நீரத் இரண்டு கதையை சூர்யாவுக்காக எழுதியுள்ளார். அதில் ஒரு கதையை சூர்ய தேர்வு செய்துள்ளாராம்.