ரஷ்யாவின் Kursk பெரு நிலப்பரப்பில், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு உள்ளே இருக்கும் இந்த Kursk நகரை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில். அதனை தொடர்ந்து தக்கவைத்தும் வருகிறது. இதனால் சொந்த நாட்டுக்கு உள்ளேயே விமானம் மூலம் குண்டு வீசி தாக்கவேண்டிய நிலையில் ரஷ்யா உள்ளது.
இது தான் மோசமான நிலை என்று பார்த்தால், அதனை விட மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Kursk நகருக்கு வெளியே (ரஷ்ய கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில்) பெரும் வான் எதிர்ப்பு ஏவுகணை சிஸ்டம் ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது. Kursk நகரில் உள்ள உக்ரைன் படைகளை தாக்க வந்த ரஷ்யாவின் போர் விமானம், அந்த வான் எதிர்ப்பு ஏவுகணை சிஸ்டம், உக்ரைன் படைகளின் ஏவுகணை என நினைத்து, அதன் மீது தாக்குதல் நடத்தி அதனை அழித்துள்ளது.
பின்னர் தான் அது ரஷ்யாவின் தளம் என்பது விமானிக்கு தெரியவந்துள்ளது. இது ரஷ்ய வான் படை விட்ட மிகப்பெரிய பிழை என்று கருதப்படுகிறது. ரஷ்ய வான் படை விமானம் , எந்த இலக்கை தாக்க வருகிறோம் என்று தெரியாமல் வந்து, ஏதோ ஒரு இலக்கை தாக்கி விட்டுச் சென்றுள்ளது. என்று நம்பப் படுகிறது. அப்படி என்றால் சரியான திட்டமிடல் இல்லை என்பது தான் அதன் அர்த்தம்.
Source : MSN