Train First Look: விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கும் ‘டிரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, விஜய்சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ (Train) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தை மிஷ்கின் இயக்குகிறார். படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில் முதன் முதலாக விஜய் சேதுபதி கேரக்டரை ரிவீல் செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

அதில் டிரெயின் போல் இருக்கும் கம்பார்ட்மெண்டில் தாடியுடன் விஜய் சேதுபதி ஓடி வரும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ‘டிரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை விஜய் சேதுபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.