காஞ்சி உத்திரமேரூர் அருகே உள்ள ஏரியில், ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மூவரது சடலங்கள் மிதந்து கொண்டு இருந்தது. இதனை அதிகாலை கண்ட மக்கள் பீதியில் பொலிசாருக்கு அறிவிக்க. விரைந்து செயல்பட்ட பொலிசார், பெரும் சிரமத்தின் மத்தியில் 3 சடலங்களையும் கைப்பற்றினார்கள்.
3 பேரும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என்றும், அவர்கள் முகம் கருகி இருக்கிறது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சடலத்தை அடையாளம் காணக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் அவர்கள் பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. மூன்று பேருமே வாலாஜாபாத் அருகே இருக்கும் பள்ளியில் கல்விகற்று வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
உடலை மீட்ட போலீசார் உடற் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்த பரத்திற்கும் சிறுமையூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மோதலில் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.