கடந்த 45 நாட்களில், 25 கப்பலை இலங்கை துறை முக அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இந்தச் செய்தி இலங்கை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மேலும் சொல்லப் போனால் அரிசி தொடக்கம் அத்தியவசிய பொருட்கள் அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இன் நிலையில் ஏன் 25 கப்பலை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழும்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கண்டெனர்களை, சரியாக கையாள வில்லை அதிகாரிகள். கண்டெனரில் உள்ள பொருட்களை உடனடியாக இறக்கி அதனை கிளியர் செய்து இருந்தால். புது கப்பல் வந்தால் அதில் உள்ள கண்டெனரை இறக்க முடியும். ஆனால் துறைமுகத்தில் மலை போல கண்டெனர்கள் குவிந்து கிடக்கிறது. இதனை கிளியர் செய்ய ஆட்கள் இல்லை. அல்லது அதிகாரிகளின் கவனக் குறைவே இதற்கு காரணம்.
தற்போது அத்தியவசிய பொருட்களை ஏற்றி வந்த 25 கப்பலை திருப்பி அனுப்பி உள்ளார்கள் அதிகாரிகள். இனி அவை மீண்டும் இலங்கை வர எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இப்படியான நிலமையை, பொறுப்பற்ற அதிகாரிகளே செய்து வருகிறார்கள். இதனால் மக்களே பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.