Test OTT Release: மாதவனுடன் நடித்துள்ள நயன்தாரா படம் ஓடிடியில் ரிலீஸா?



நயன்தாராவின்  திருமண டாக்குமெண்ட்ரி ஓடிடியில் ரிலிசாகி பெரிதாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள அடுத்த படமும் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. 

சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘டெஸ்ட்’. இதில் நயன்தாராவுடன் சேர்ந்து நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடித்துள்ளனர். வழக்கமாக தனக்கான லீட் கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா இந்த படத்திலும் அதே பாணியை தேர்வு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. 

படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற நிலையில் படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த. நிலையில்  நயன்தாரா, மாதவன் நடித்த டெஸ்ட் படம் திரையரங்குகளில் வராது என்றும், நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால், இதற்கான ஓடிடி உரிமத்தை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பதை படக்குழு வெளியே தெரிவிக்காமல் உள்ளது. ஏற்கெனவே நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன், O2படங்கள் ஓடிடியில் ரிலீசாகின. அந்த வரிசையில் “டெஸ்ட்” படமும் சேருமா..?