Pakistan Gold: சிந்து நதியில் டன் கணக்கில் தங்க புதையல் – அதிர்ஷ்டம் யாருக்கு?

பாகிஸ்தானில் டன் கணக்கில் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.  இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்கும், மற்றொரு பகுதி பாகிஸ்தானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் லட்சக்கணக்கில் தங்கம் கொட்டிக்கிடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..?

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்தியா வழியாக பாகிஸ்தானுக்குள் பாய்ந்து செல்கிறது. சிந்து நதியை ஒட்டிய சிந்து சமவெளி பழங்கால நாகரீகத்துக்கு எடுத்து காட்டாக விளங்குகிறது. இந்த பகுதியில் சுமார் 3,200 கி.மீ. தூரத்துக்கு பாயும் சிந்து நதி பல கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்கிறது.

இந்த சிந்து நதி ஓரத்தில் இந்திய ரூபாயில் சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவான டெக்டானிக் பிளேட்டுகளின் மோதலால் மலை உருவாகும்போது அரிப்பு காரணமாக தங்க துகள்கள் உருவாகி இருக்கலாம் என்றும் அது நதியின் வேகத்த்ல் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. 

இதனால் சிந்து மற்றும் காபூல் ஆற்று படிமங்களில் பல நூறு ஆண்டுகளாக தங்கம் புதைந்துள்ளன. அதாவது, பாகிஸ்தானின் அட்டோக்கில் இருந்து தர்பேலா மற்றும் மியான்வாலி வரை 32 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த தங்க புதையல் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவலை பஞ்சாப்பின் முன்னாள் சுரங்க அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 127 இடங்களில் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தங்க புதையல் இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலால் உள்ளூர் மக்கள் தங்கம் தேடி அப்பகுதிக்கு புறப்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

தற்போது பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான் இந்த தங்க புதையலை பயன்படுத்துமா..? அதன் தலைவிதியை தங்க புதையல் மாற்றுமா?