தற்போது லண்டனில் உள்ள ஒரு சில இளைஞர்களும் சரி, வயதானவர்களும் சரி உடல் எடையை குறைக்கவேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் அதுபற்றி கவலை படுவதே இல்லை. சாக்கிளேட், கிரிப்ஸ், பீட்ஸா , பேர்கர் என்று எதில் எல்லாம் அதிக கலோரிகள் உள்ளதோ அதனை வாங்கி உண்டு உடல் எடையை ஏற்றி வருகிறார்கள். பின்னர் அவர்கள் சக்கரை வியாதி போன்ற நோய்களுக்கு ஆளாகும் போது தான் எடையை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல.
தமது உணவு பழக்க வழங்கங்களை மாற்றாமல் எடையை குறைக்க நினைக்கிறார்கள் பலர். இதனைப் புரிந்துகொண்ட மருந்துக் கம்பெனிகள் ஒரு புதுவிதமான மருந்தை கண்டு பிடித்துள்ளார்கள். அதன் பெயர் தான், மனு-ஜாரொ. குறித்த மருந்து 126£ பவுண்டுகள் ஆகும். மாதம் ஒரு முறை இதனை ஊசி மூலம் எடுக்க வேண்டும். எனவே 12 ஊசிகளை ஒரு வருடத்தில் எடுத்தால் உங்கள் எடை அதிகரிக்காது. நீங்கள் எதனை வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
எனவே ஒரு நபருக்கு வருடத்திற்கு 1000 பவுண்டுகளுக்கு மேல் ண்Hஸ் செலவு செய்தால், அதோ கதி தான். பிரிட்டனில் சுமார் 18 மில்லியன் மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் GP இந்த ஊசியை கொடுத்தால் சுமார் 8 மாதங்களில் ,நஷனல் ஹெல்த் ரஸ்ட்(NHS) பணம் எதுவும் இல்லாமல் முடங்கிப் போகும்.