லண்டனின் மிக முக்கிய விமன நிலையமான, ஹீத் ரூ விமான நிலையம் செல்லும் ஆ30 பாதையில் நேற்று பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. என்னடா இது இந்த நேரத்தில் இப்படியா என்று பலர் சலித்துக்கொண்டு காரில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் வாகன நெரிசலில் சிக்கியதற்கு காரணம் 2 தடி மாடுகள் தான். ஒருவரை ஒருவர் காரில் முந்த முனைந்துள்ளார்கள்.
அதனால் ஏற்பட்ட முறுகலால் காரில் இருந்து இறங்கி வந்து, ஒரு நபர் மற்ற நபருடன் சண்டை போட. இருவரும் கட்டிப் புரண்டு நடு வீதியில் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளார்கள். அவர்கள் இருவரது காரும், வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மறித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால்..
இவர்களோ சண்டை போடுவதை நிறுத்துவதாக இல்லை. இந்த சண்டையை தடுக்க எவரும் இல்லை. ஆனால் வீடியோ மட்டும் எடுத்து சமூக வலையத்தளத்தில் போட நிறைய பேர் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியான ஒரு நிலையில் தான் இன்று பிரித்தானியா இருக்கிறது பாருங்கள்.
Source : https://www.thesun.co.uk/news/32772654/two-men-wrestle-road-rage-row-huge-delays/